பதுளையில் 50 பேருக்கும், நுவரெலியாவில் 25 பேருக்கும் நேற்று கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 25 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், ஹங்குராங்கெத்த, ஹட்டன், கந்தபளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் தலா ஒருவர் வீதம் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன், பதுளை மாவட்டத்தில் 50 பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles