பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள்

பதுளை மாவட்டத்துக்கு மேலும் இரு லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளும், நுவரெலியா மாவட்டத்துக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கைக்கு நாளை 20 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் வரவுள்ளன.

இவற்றில் குருணாகல் மாவட்டத்துக்கு 4 லட்சம் தடுப்பூசிகளும்,  காலி மாவட்டத்துக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகளும், அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

மாத்தறை, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தலா 2 லட்சம் தடுப்பூசிகள் வீதமும்,  புத்தளம், நுவரெலியா, மொனறாகலை, பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

Paid Ad
Previous articleகொரோனாவால் மேலும் 26 ஆண்களும், 21 பெண்களும் பலி
Next articleரிஷாட்டுக்காக கை தட்டும் மனோ, திகா, வேலுகுமார்! டிலான் பெரேரா விளாசல்