எல்ல பொலிஸ் பிரிவின் பதுளை, பண்டாரவளை பிரதான வீதியில் தனியார் பஸ்சொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி, இன்று விபத்துக்குள்ளாகின.
இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமுற்று, தெமோதரை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
எல்ல பொலிசார், இவ் விபத்து குறித்து, புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதி விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.