பதுளை ரயிலில் இருந்து விழுந்து வெளிநாட்டு பிரஜை காயம்!

ரயிலில் இருந்து தவறி – கீழே விழுந்து வெளிநாட்டு பிரஜையொருவர் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பொடி மெனிகே ரயிலில் இருந்து தவறி விழுந்தே குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

ஈரான் நாட்டை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். ஹொய்ய – ஹப்புத்தளைக்கு இடைப்பட்ட பகுதியிலேயே அவர் விழுந்துள்ளார்.

காயமடைந்தவர் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 1990 ஆம்பியூலன்ஸ் ஊடாக தியத்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles