பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை!

நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுந்தரலிங்கம் சசிதரன் என்ற குறித்த இளைஞன் கடந்த 3 ஆம் திகதிமுதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவ தினத்தன்று நுவரெலியா நகருக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. என குறித்த இளைஞனின் பெற்றோர் கடந்த 6 ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞனை கண்டவர்கள் 0763497788 என்ற (ஆனந்தராஜ்) தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles