பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு?

” பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கையில் பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை என்ற கருத்தை ஏற்கமுடியாது. சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தினால் இது தெரியவரும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பயங்கரவாத தடைச்சட்டத்தை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை எனவும், அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் இந்த பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் (சாணக்கியன்) சுட்டிக்காட்டினார். இந்த கருத்துடன் உடன்படி முடியாது.

உதாரணமாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டால் முடிவு என்ன என்பது உங்களுக்கே தெரியும். ” – என்றார்.

Related Articles

Latest Articles