” அனைத்து கட்சிகளையும் பழிவாங்கும் நோக்கில் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக நாம் அனைவரும் அணிதிரள வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், சம்பிக்க ரணவக்க உட்பட எதிரணி அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.










