பஸிலின் கூட்டணி கோரிக்கை நிராகரிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது கட்சி என அறிவித்து, பஸில் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

அத்துடன், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இதே நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

நாட்டின் நலன்கருதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என புதியதொரு கூட்டணிக்கு பஸில் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ,

“ நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்புகளுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவது? உயர்நீதிமன்றம்கூட தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இவ்வாறான தலைமைகளுடன் எப்படி இணைவது? இதனை மக்கள் அனுமதிப்பார்களா? இல்லை. மக்கள் நிராகரித்துள்ளனர். இந்த பயணம் சாத்தியமாகாது. தமது ஆட்சியை தக்கவைக்கவே இப்படியான முயற்சி இடம்பெறுகின்றது. முதலில் தேர்தலை நடத்தட்டும். அப்போது மக்கள் ஆணை வழங்குவார்கள்.” என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, மொட்டு கட்சி வங்குரோத்து அடைந்துவிட்டது. எனவேதான் இப்படியான கதைகள் வருகின்றன. மக்களை திசைதிருப்பும் நோக்கிலேயே இப்படியான யோசனைகள் வருகின்றன என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles