நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 128 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 3 விக்கெட் இழப்புக்கு 15 ஓவர்களில் 131 ஓட்டங்களை எடுத்து வெற்றியை தனதாக்கியது இந்திய அணி.