பாடசாலை மாணவர்களை துரத்திய மாடு – ஐவர் காயம்

ஹப்புத்தளை பெரகல பகுதியில் இன்று காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த ஐந்து மாணவர்களை மாடு துரத்திய நிலையில், ​​காயமடைந்த அவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெரகல, பத்கொட விபுலானந்த தமிழ் கல்லூரியில் பயிலும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பாரதூரமான காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 ராமு தனராஜா

Related Articles

Latest Articles