பாடசாலை வளவில் மது அருந்திய மாணவர்கள் – கம்பளையில் கொடூரம்

கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து ஒரு போத்தல் சாராயத்தை அருந்திவிட்டு, பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்த நான்கு மாணவர்களும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விடுமுறை தினமான கடந்த திங்கட்கிழமை காலை கம்பளை நகருக்கு வந்த இவர்கள், நகரில் உள்ள சாராயக்கடை திறந்தவுடன் ஒரு போத்தல் சாராயத்தை வாங்கியதுடன் கடலை பக்கெட் ஒன்றையும் சில பீடிகளையும் வாங்கியுள்ளனர்.

அவற்றை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு பின்னாலுள்ள பற்றைக் காட்டுக்குள் நுழைந்து ஒரு மறைவிடத்தில் அமர்ந்து ஒரு சில நிமிடங்களில் சாராய போத்தலை காலி செய்துள்ளனர்.

பின்னர் பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது கம்பளை பொலிசார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

கம்பளை பொலிசார் இந்த மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து தமது பிள்ளைகள் விடுமுறை தினத்தன்று எங்கே செல்கின்றார்கள் என்பது குறித்து அவதானம் செலுத்தும்படி எச்சரித்த பின்னர் மாணவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles