பாதாள குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“அரசாங்கம் என்ற வகையில், பாதாள குழுவை போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். ஆனால் ஊடக கண்காட்சிக்காக இரண்டு வார நடவடிக்கைகளில் செய்ய எதிர்பார்க்கவில்லை.
இதில் பாதுகாப்பு படையினர் படிப்படியாக தலையிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும்தான் சொல்ல முடியும். அதன் முடிவுகளை பார்க்க முடியும்.” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
