வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவெதையும் எடுக்கவில்லை. இது விடயம் தொடர்பில் கட்சியாகவே இறுதியான – உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் வாக்குகேட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, பின்னர் சுயாதீனமானவர்களே கட்சிமீது கல்லெறிகின்றனர். இது பற்றி நாம் பதற்றம் அடையவில்லை. அந்த கற்களை வைத்து பாதை அமைத்து பயணிப்போம். எமது பயணம் மெதுவானதாக இருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கியது. தற்போது கல்லெறிபவர்கள் அப்போது பார்வையாளர்களாக மாறுவார்கள்.
அவர்களுக்கு பெரிய சவால் அல்ல, சிறியதொரு சவாலை விடுக்கின்றேன், முடிந்தால் அடுத்துவரும் ஏதேனும் ஒரு தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுங்கள். அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் கட்சியின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டையே கட்சி செயலாளர் வெளிப்படுத்தியுள்ளார். ” – என்றார்.
