பாதீடு தோற்கடிக்கப்படுமா? பரபரப்புக்கு மத்தியில் நாளை வாக்கெடுப்பு!

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை (21) மாலை 6 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, நாளைய தினம் கட்டாயம் சபைக்கு வருகை தருமாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஆளுங்கட்சி பிரதம கொறடா அலுவலகம் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

14 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமானது. இன்றும் விவாதம் தொடரவுள்ளது. நாளையும் 2 ஆம்வாசிப்புமீதான விவாதம் நடைபெற்று, மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பாதீட்டை தோற்கடிப்பதற்கு எதிரணி தரப்பில் உரிய முயற்சிகள் இடம்பெறவில்லை என்றபோதிலும், ஆளுங்கட்சியின் பலத்தைக்காட்ட வாக்கெடுப்பில் கட்டாயம் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

22 ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் நடைபெறும். டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

Related Articles

Latest Articles