2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், பாதீட்டில் பெருந்தோட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டையும் அவர் வரவேற்றார்.