பாதீட்டுக்கு முன் விசேட அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு எதிர்வரும் 13 திகதி நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாகவே அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பாதீட்டின் உள்ளடக்கம் உள்ளிட்ட விடயங்களுக்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவுள்ளது.

13 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டஉரை மாத்திரமே நடைபெறும்.

மறுநாள் நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணக்கு இடம்பெறவுள்ளது.

பாதீட்டு கூட்டத்தொடர் காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும், வாக்கெடுப்பு நேரங்களில் கட்டாயம் சபையில் இருக்குமாறும் ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles