பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீட்டை வரவேற்கிறேன் – பொன்சேகா

” பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு கடந்த வருடத்தை விடவும் இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கதக்க விடயமாகும். ஏழை நாடாக இருந்தாலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்காமல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு கடந்த வருடத்தை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு நியாயமானது. நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே, படையினருக்கான உணவு உள்ளிட்ட விடயங்களுக்காக அதிகரிப்பு நியாயமானது. சிறிய நாடாக இருந்தாலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles