” மலையக தனி வீட்டுத் திட்டத்தில் உண்மை எது, பொய் எது என்பது மக்களுக்கு தெரியும். எனவே, தந்தைபோன்றே இன்று மகனும் பொய்யுரைக்கின்றார்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” எனது அரசியல் வாழ்வில் மூன்றாவது முறையாகவும் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளேன். வாக்களித்து அங்கீகாரம் வழங்கும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாம் 400 வீடுகளைக்கூட கட்டவில்லை என இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டன்ஷன் தோட்டத்தில் 350 வீடுகளும், பொகவந்தலாவயில் 350 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. இவை இரண்டைக்கூட்டினால்கூட 500 ஐ தாண்டிவிடுகின்றது. எனவே, இராஜாங்க அமைச்சர் கணக்கில் ‘வீக்’ போல தெரிகிறது.
குறிப்பாக தந்தைபோன்றேபொய் பேசுகிறார். உண்மை எதுவென மக்களுக்கு தெரியும் என்பதால் எமக்கு பிரச்சினை இல்லை. அதேவேளை, நாட்டுக்கு நன்மைபயக்ககூடிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். தீங்கு விளைவிக்ககூடிய யோசனைகளை எதிர்ப்போம்.” -என்றார்.










