பாராளுமன்றத்தில் மூன்றாவது முக்கிய பதவிக்கு தமிழர்

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக குழுக்களின் பிரதி தவிசாளரே அதிகாரம் படைத்தவராக காணப்படுகின்றார். சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோர் இல்லாத சந்தர்ப்பங்களில் இவர் தலைமையிலேயே பாராளுமன்றம் கூடும்.

8ஆவது பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதி தவிசாளராக செல்வம் அடைக்காலநாதனும், 7 ஆவது பாராளுமன்றத்தில் முருகேசு சந்திரக்குமாரும் அப்பதவியை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே 9 ஆவது பாராளுமன்றத்திலும் அப்பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles