ஜப்பானில் பாராளுமன்ற உறுப்பினராகிய யூடியுப் பிரபலம் யொஷிகாசு ஹிகாஷிடானி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்று 7 மாதங்களாகியும் அவர் ஒரு நாள் கூட பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கெடுத்ததே இல்லை. வேலைக்கே வரவில்லை என்பதால் அவரைப் பதவியிலிருந்து நீக்க பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது.
இதுபோன்ற காரணத்திற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜப்பானின் முதல் பாராளுமன்ற உறுப்பினர் இவராவார்.
ஹிகாஷிடானி யூடியுப் தளத்தில் பிரபலங்கள் பற்றிய வதந்திகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார். அவர் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசித்து வருவதாக நம்பப்படுகிறது.
மோசடி, அவதூறு ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் பாராளுமன்றத்திற்குச் செல்ல மறுத்ததாக உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டன.










