பிக்பாஸ் 5ஆவது சீசனில் சகிலாவின் மகள் பங்கேற்பு

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது.

ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா ஆகியோர் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இவர்களுடன் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா கலந்துகொள்ள உள்ளதாகவும், இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Paid Ad