மட்டக்களப்பில்,14 வருடங்களாக தலைமறைாவாகி இருந்த குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்நபர் தனது பெயரை மாற்றிக்கொண்டு மதம் மாறிய நிலையில் பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலேயே கைதாகியுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இந்நபர், நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் செய்திருந்தார்.பின்னர்,மனைவியின் இரு பிள்ளைகளையும் அடித்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 2009ஆம் ஆண்டு கைதாகி பிணையில் வெளிவந்திருந்தார்.
உயர் நீதிமன்றில் ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு, திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையிலே,இவர் 14 வருடங்கள் தலைமறைவாக வாழ்ந்திருந்தார்.