பிணங்களுக்கு நடுவே அமலா பால், வெளியான திகில் First Look

தமிழில் முன்னணி கதாநாயகியாக கருதப்படுபவர் நடிகை அமலா பால். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் ஆடை. அதற்குப்பின் இவரை தமிழில் காணமுடியாமல் இருந்தது.

தற்போது அமலா பால் அனூப் எஸ் பானிக்கர் இயக்கத்தில் நடித்து தயாரித்துள்ள படம் தான் கேடவர். இதில் இவர் போரென்சிக் சர்ஜியானாக வருவார் என தெரியவந்துள்ளது.

இந்த படம் ஒரு போரென்சிக் திரில்லர் படமாக இருக்கும் என அவர் ஏற்கனவே ஒரு நேர்க்கானலில் கூறியிருந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் first look போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் அமலா பால் கண்ணாடி அணிந்துக்கொண்டு பார்ப்பதற்கு அசல் சர்ஜியன் போல காட்சி அளிக்கிறார். மேலும் அவர் பிணக்கிடங்கில் இறந்துப்போன சடலங்களுக்கிடையில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட உடல் உறுப்புக்களின் மத்தியில் அமர்ந்தப்படி உணவு உண்பதுபோன்ற போஸில் இருக்கிறார்.

இது பார்பதற்கே திகிலாக இருக்கிறது. இந்த போஸ்டர் மேலும் படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டியுள்ளது.

Related Articles

Latest Articles