பிரதமர் பதவி விலக முன் போராட்டத்தை விமல் முடித்து கொண்டது ஏன்?

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்த முடிவில் விமல்வீரவன்சவின் சத்தியாக்கிரகப் போராட்டம் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

6 ஆம் வகுப்புக்குரிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2027 ஆம் ஆண்டுவரை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதே என அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாக உள்ளது.

எனவே, அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவரின் போராட்டம் தொடரட்டும்.

கல்வி அமைச்சின் செயல்பாடு மற்றும் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர் தொடர்ந்து போரடட்டும்.
எவராவது இளநீர் வழங்கி சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்து வைக்கக்கூடும்.” – என்றார்.

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் விலக வேண்டும். இதுவரையில் போராட்டம் தொடரும் என விமல் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், தனது போராட்டம் வெற்றி எனக் கூறி விமல் வீரவன்ச தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார்.

Related Articles

Latest Articles