பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு

அரசாங்கத்தின் நிர்வாக முடிவுகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அரச சேவையினாலேயே அரச சேவை பின்னடையும் நிலை ஏற்படுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

கேகாலை நகர சபையில்  நடைபெற்ற ‘தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட கேகாலை மாவட்ட மீளாய்வுக் கூட்டத்தில்’ கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மக்கள் பங்களிப்புடன் கூடிய வேலைத்திட்டம் தேவை. நாட்டை உணவில் தன்னிறைவடைந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. பயிரிடுவதற்குள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்.ஆர்.சி. காணிகள் விவசாயத்திற்காக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. காணிச் சீர்திருத்தச் சட்டத்தினால் விவசாயிகள் இழந்த பல பகுதிகள் உற்பத்தி நடவடிக்கைகளில் பங்கு பெறச்செய்வதற்கான வாயில்கள் திறக்கப்பட்டன. சட்டத்தின் நோக்கங்கள் அல்லது தற்போதைய உணவுப் பாதுகாப்பை அடையும் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டுமானால், நாம் மக்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்.

நாம் பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளோம். வெளிநாடுகளுக்கு செல்லும் அந்நியச் செலாவணியைக் குறைக்க வேண்டியது அவசியம். எந்தவொன்றையும் விதைத்து அறுவடைசெய்யக்கூடிய வளமான மண் நம்மிடம் இருப்பதால், உணவு உற்பத்தி என்ற இலக்கை அடையலாம்.  எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles