பிரதான எதிர்க்கட்சி இன்றி இன்று கூடுகிறது ‘வங்குரோத்து நிலை’ குறித்து ஆராயும் தெரிவுக்குழு

நாடு பொருளாதார வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(18) முதன்முறையாக கூடவுள்ளது.

தெரிவுக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட தெரிவிக்குழு கடந்த 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

இக்குழுவில் அங்கம் வகிக்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன அறிவித்துள்ளன.

Related Articles

Latest Articles