பிரிட்டன் இளவரசி MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விஜயம்

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்தவிஜயத்தின் போது,​ இளவரசி Anne, அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமதி லோரன்ஸ் மற்றும் அரச தூதுக்குழு மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் ஆகியோர், கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு விஜயம் செய்தனர். இதன்போது அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

MAS Holdings இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளர் மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வேலை வழங்கும் நிறுவனமாகும்.

MAS Nirmaanaவில் அவர்கள் நிறுவனத்தின் ஆடை நிபுணத்துவம் மற்றும் கண்டுபிடிப்பு திறன்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றனர். MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ மற்றும் MAS Active இன் பிரதம நிறைவேற்று அதிகாரி முடித பெர்டினாண்டோ ஆகியோர் இந்த கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்கு இராஜரீகமான பிரதிநிதிகளுடன் ஒன்றிணைதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய சிந்தனைகளை ஆராய்வது முதல் டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்குவது வரை அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் திறன்களைக் கொண்ட உலகளாவிய ஆடை உற்பத்தி மையமான Nirmaanaவிற்கு பிரித்தானிய இளவரசி மற்றும் சேர் திமதி லோரன்ஸ் ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். MAS Nirmaana உலகளாவிய ஆடைத் துறையில் முன்னணியில் உள்ளது, இது முன்னோடி படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னணி மையமாக உள்ளது.

MAS Holdings குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

“பிரித்தானிய இளவரசி மற்றும் சேர் திமதி லோரன்ஸ் எங்கள் நிறுவனங்களில் ஒன்றிற்கு வருகை தந்ததில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். எங்கள் 36 வருட ஆடைத் தொழிலில், எங்களின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக இங்கிலாந்து முக்கியப் பங்காற்றியுள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான நட்பு MAS க்கு சமமான முக்கியமான சந்தர்ப்பமாகும்.” என தெரிவித்தார்.

MAS Holdings தொடர்பில்

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS குழுமம், ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பாளர்-விநியோகஸ்தர் ஆகும். இங்கு 100,000 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இன்று, MAS தனது தயாரிப்புகளை 15 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி வசதிகளுடன் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.

MAS இன் தயாரிப்பு வரம்பில் Intimate wear, விளையாட்டு, பயிற்சி மற்றும் செயல்திறன் ஆடைகள், நீச்சலுடைகள், Shape ஆடைகள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கான ஆடைகள் ஆகியவை அடங்கும். MAS பிராண்ட் ஆடை தொழில்நுட்பம், FemTech, Start-ups, மூலப்பொருள் விநியோகச் சங்கிலி மற்றும் ஆடை பூங்காக்கள் மூலம் உலகம் முழுவதும் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேகமாக விரிவடைந்துள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, MAS ஆனது அதன் நெறிமுறை மற்றும் நிலையான பணிச்சூழலுக்காகவும், அதன் கைவினைத்திறன் மற்றும் தயாரிப்பு சிறப்பிற்காகவும், அத்துடன் பெண்கள் அதிகாரமளித்தலுக்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles