பிள்ளையானை பதவி நீக்கம் செய்யவும் – ஜே.வி.பி. வலியுறுத்து

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்று இடம்பெற வேண்டுமெனில் இராஜங்க அமைச்சர் பிள்ளையான் மற்றும் புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே ஆகியோர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் நிறைவேற்றுகுழு உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தினத்தன்று திட்டமிட்ட அடிப்படையில் ஒரு மணிநேரத்துக்குள் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், விசாரணைகள் சரியான திசையில் செல்லவில்லை. அப்போது பிரதமராக இருந்தவர் தற்போது ஜனாதிபதியாக உள்ளார். எனவே, இனியும் விசாரணை முறையாக நடக்குமா என தெரியவில்லை.

சிஐடியினர் இதுவரை முன்னெடுத்த விசாரணைகளை அடிப்படையாகக்கொண்டு சுயாதீன விசாரணையொன்று இடம்பெற வேண்டுமெனில் முக்கிய இரு விடயங்கள் இடம்பெறவேண்டும்.

ரணில் ஆட்சியில் இராஜங்க அமைச்சராக உள்ள பிள்ளையான்மீது குற்றச்சாட்டு உள்ளது, எனவே, அவர் பதவி நீக்கப்பட வேண்டும்.

2ஆவது ரணிலின் ஆட்சியின்கீழ் அரச புலனாய்வு பிரிவு பிரதானியாக உள்ள சுரேஷ் சலேயும் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles