‘பீச் ஹொலிபோல்’ – பதுளை மாவட்ட மகளிர் அணி மூன்றாமிடம்….!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் கடற்கரை கரப்பந்தாட்டப் பேட்டிக்காக (பீச் ஹொலிபோல்) பதுளை மாவட்டம் சார்பில் ஹாலிஎல எல பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து கலந்து கொண்ட விரியும் சிறகுகள் விளையாட்டுக் கழகத்தின் மகளிர் அணி 3 ஆம் இடத்திற்காக இடம்பெற்ற போட்டியில் குருநாகல் மாவட்ட அணியுடன் மோதி 3 -2 என்ற அடிப்படையில் வெற்றிப் பெற்று வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

இப்போட்டியில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்திய ஜெயராமன் திலக்சனா, கனகநாதன் லசினியா ,செல்வன் சிறிசாந்தினி ஆகிய வீராங்கனைகளையும் ஹாலிஎல பிரதேச செயலகத்தின் தேசிய இளைஞர் சேவைகள் அதிகாரி என். சிவக்குமாரையும் படங்களில் காணலாம்.

34 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டிகளில் வரலாற்றில் முதன்முறையாக பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை இதுவே முதல் தடவையாகும். இவ் வீராங்கனைகளை வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.

பசறை நிருபர்

Related Articles

Latest Articles