புடினை கைது செய்யுமாறு உத்தரவு – ICCமீது ரஷ்யா கொதிப்பு

உக்ரைன்மீதான படையெடுப்பு தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணையை பிறப்பித்துள்ளது.

உக்ரைனில் தனது படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு புடினே பொறுப்பு என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

” ரஷ்ய படைகள் அடுக்குமாடி கட்டிடங்கள் மீது ஏவுகணைகளை வீசியதையும் பொதுமக்களை சுட்டுக் கொல்லும் முன் சித்திரவதை செய்வதையும் பெண்களையும் சிறுமிகளையும் திட்டமிட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதையும் உலகம் திகிலுடன் பார்த்தது.

ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட பலரை ரஷ்ய படையினர் தூக்கிலிட்டனர். அவர்களின் உடல்கள் தரையில் தோண்டப்பட்ட ஆழமான குழிகளில் வீசப்பட்டன. ” உட்பட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே புடினுக்கு எதிராக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நகர்வு மேற்குலகின் மற்றுமொரு சூழ்ச்சியென ரஷ்யா சாடியுள்ளது.

Related Articles

Latest Articles