புதிய அரசியலமைப்பு நிச்சயம் வரும் – அமைச்சர் காமினி லொக்குகே உறுதி

” புதிய அரசியலமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் இவ்வருடத்துக்குள் நிறைவுபெறும்.” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு கடந்த அரசே பொறுப்புகூறவேண்டும். சட்டதிருத்தத்தை மேற்கொள்ளாமல் தேர்தலை நடத்தமுடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, உரிய ஏற்பாடுகளில் பின்னர் அடுத்த வருடம் முற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கின்றேன்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பு நிச்சயம் இயற்றப்படும். அதற்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஆளும், எதிரணி என அனைத்து தரப்புகளிடம் கருத்துகளை, ஆலோசனைகளை பெற்றது. இவ்வருடத்துக்குள் ஆரம்பக்கட்ட வரைவு நகல் முன்வைக்கப்படும்.

நாட்டில் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் தவறால் விலை உயர்வு இடம்பெறவில்லை. உலக சந்தை நிலைவரத்துக்கு அமையவே மாற்றம் இடம்பெற்றது.” -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles