புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் மும்முரம்….! மலையக கட்சிகளுடனும் பேச திட்டம்….!!

புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவுக்கும், ஐக்கிய காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, தயாசிறியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் ஜ‌னாதிப‌தி தேர்த‌ல் மற்றும் பொது தேர்த‌ல்களில் புதிய‌ கூட்ட‌ணி அமைப்ப‌து தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌ட்சியின் உய‌ர்பீட‌த்துட‌ன் பேசி முடிவெடுக்க‌ப்ப‌டும் என‌ க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் , நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறியிடம் தெரிவித்தார்.

இப்பேச்சு வார்த்தையில் க‌ட்சியின் பொருளாள‌ர் முஸ்ன‌த் ம‌ற்றும் ர‌ஞ்சித் பீரிஸ் ஆகியோரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

அதேவேளை, மலையகத்தில் உள்ள கட்சிகளுடனும் எதிர்காலத்தில் தயாசிறி ஜயசேகர பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles