புதிய வகை கொரோனா இங்கிலாந்தில் ஊழித்தாண்டவம் – ஒரு நாளில் 1,401 பேர் பலி!

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால்  ஆயிரத்து 401 பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தை உலுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், மறுபுறம் வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் பரவலாக ஊகங்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போரிஸ் ஜான்சன், “

தென்கிழக்கில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் அதிக அளவு இறப்பு ஏற்படுத்துவதற்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் உள்ளன” என்றார்.

மேலும், தற்போதைய கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த போரிஸ் ஜாசன், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுப்பதாக கூறினார்.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் சீனா உள்பட சுமார் 60 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Paid Ad