புதுவருடத்திற்கு பின் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேசுவோம் : ஜீவன் தொண்டமான்

எங்களுடைய வேண்டுகோளுக்கு அமையவும், மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆசைப்பட்டதற்கு அமைய இன்று மக்கள் கைகளில் ஆயிரம் ரூபாய் முழுமையாக கிடைக்கின்றது என்றும், இந்த ஆயிரம் ரூபாய் சம்பளமானது கூட்டிக் கழித்த தொகையல்ல அடிப்படையான சம்பளமாகவே மக்கள் கைகளுக்கு செல்கின்றது என்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அட்டனில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரவத்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

ஆயிரம் ரூபாய் சம்பள தொகை மக்களுக்கு சென்றடைய இதை சாத்தியமாக்கியது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆகும்.

இந்த தருணத்தில் இவர்களுக்கும் இவர்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் தொழில் அமைச்சர் நிமல்சிரிபாலடி சில்வா ஆகியோர் எம்முடன் இந்த ஆயிரம் ரூபாய் விடயத்தில் விடாப்பிடியாக இருந்ததால் இந்த தொகையை பெற்றுக்கொள்ள முடிந்தது.

இன்றைய கொரோனா காலத்தில் நாடு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டுவரும் இக்காலப்பகுதியில் ஆயிரம் ரூபாவுக்கு முக்கியத்துவத்தை தந்து இதை பெற்றுக்கொடுத்ததாக புகழ்ந்தார்.

அதேநேரத்தில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் விடயத்தில் அரசியலுக்கு அப்பால் ஏனைய துறைகளை சார்ந்தோரும்,உதாரணமாக யாழ் பல்கலைகழக மாணவர்களும்,இன்னும் பலரும் கூட ஆதரவை வழங்கினார்கள் இத்தருணத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் முழுமையான அடிப்படை சம்பளமாகவே தொழிலாளருகளுக்கு கிடைக்கிறது.

காரணம் அடிப்படை சம்பளம்900+ பட்ஜட் தொகை100 ரூபாய் என இணைக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் முழுமை சம்பளத்தினை வழங்கினாலும் இந்த முழுமை சம்பளத்திற்கே ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வழங்கப்படுகின்ற ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அடிப்படையாக கொண்டே தொழிலாளர்களுக்கான பிரசவப்பணம் உள்ளிட்ட சலுகை தொகைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் ஆயிரம் ரூபாவுக்கு வெளியான வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவு கோறி கம்பணிகள் நீதிமன்றம் சென்றனர்.

ஆனால் நீதிமன்றம் இடைக்கால தடையை வழங்கவில்லை ஆகையால் வர்த்தமானி பிரகாரம் தொழிலாளர்களுக்கு கட்டாயம் ஆயிரத்தை கம்பணிகள் வழங்க நேரிட்டுள்ளது.

மேலும் ஆயிரத்தை வழங்கியேயாகவேண்டும் என்றபடியால் கம்பணிகள் தோட்ட நிர்வாகங்களுக்கு அறித்துள்ளது ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்குங்கள் அதேநேரத்தில் நாளாந்த கொழுந்து கொய்தல் அளவை அதிகரியுங்கள் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்டப்பகுதியில் இதுவரை நாள் ஒன்றுக்கு 14-16 கிலோ கொய்து வந்த தேயிலை அளவை 20 கிலோவுக்கு அதிகமாக கொய்ய வேண்டும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக அறிந்தேன் என்றார்.

அதேநேரத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இந்த விடயம் தொடர்பில் கம்பணியாருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கம்பணி அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு சாதகமான பதில் வழங்கியுள்ளனர்.

அதனடிப்பகையில் புதுவருடத்திற்கு பின் வழமையான தொழில் நடவடிக்கைகளுக்கு மேலும் சாதகமான பதில் கிட்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் நாம் ஏற்கனவே சொன்னதுபோல ஒரு தோட்டத்தில் தொழிலாளர்கள் வழமையாக எவ்வாறு கொழுந்து கொய்கின்றனறே அந்த வழமையை மாற்றக் கூடாது எனவும் மேலதிகமாக கொழுந்து கொய்ய வேண்டுமேயானால் தோட்ட நிர்வாகமும் தொழிற்சங்க கமிட்டிகளும்,தொழில் செய்யும் மக்களும் அதை பேசி தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர்களுக்கான மருத்துவம்,பிள்ளை பராமரிப்பு,பிரசவப்பணம் உள்ளிட்ட பொது சலுகைகள் வழமையாக கிடைக்கும் இதை தடுக்க முடியாது அதேநேரத்தில் கம்ளணிகள் கடந்த காலங்களில் இவ்விடயத்தில் காத்திரமாக செயற்படவில்லை . தொழிற்சங்கம் மக்களின் ஒத்துழைப்படன் நிர்வாகத்துடனும், கம்பனியுடனும் தலையிட்டு பெற்றுக்கொடுத்துள்ளது.

அத்துடன் இந்த சலுகைக்கும் சம்பள உயர்வுக்கும் எந்தவோர் தொடர்பும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஏழுவருடத்திற்கு முன் ஆரம்பமான விடயமே இந்த ஆயிரம் ரூபாய் இந்த சந்தர்ப்பத்தில் இன்றைய நிலையில் தொழிலாளர்களின் வாழ்வூதாரத்திற்கு இந்த தொகை சக்தியாக மாறியுள்ளது.

இருப்பினும் இத்தொகை இ.தொ.காவின் இலக்கல்ல மாறாக தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு இந்த ஆயிரம் ரூபாய் உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என விபரித்தார்.

நாட்சம்பள வழமையினால் மக்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது அத்துடன் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் இந்த வழமையை சற்று மாற்றியாக வேண்டும் .

இது தொடர்பில் பல்வேறு பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இருப்பினும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தீர்வு எட்ட முடியாமல் உள்ளது என்றார்.

அதேநேரத்தில் புதுவருடத்திற்கு பின் இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் அமர்ந்து பேசி இந்த வழமைக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தொழிலாளர்களின் பொருளாதாரத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பின்றி சிறந்த தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

அதே சந்தர்ப்பத்தில் தொழிலாளார்கள் நாளாந்தம் பறிக்கும் கொழுந்து அளவை இவ்வளவுதான் பறிக்க வேண்டும் என்ற ஒன்றை எவ்விடத்திலும் குறிப்பிடமாட்டோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதேநேரத்தில் முன்னேற்றக்கரமான வெற்றிகளுக்கு முன்வைக்கப்படும் விமர்சனங்களை மக்கள் மீது காட்டியிருந்தால் தொழிற்சங்க பிரச்சினை என்று ஒன்று வந்திருக்காது எனவும் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles