புதையல் தோண்டிய நால்வர் கைது

பதவிய பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த நான்கு பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய பதவிய பொலிஸ் பிரிவின் பொக்கவெத்த பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 41,39,37,29 வயதுடைய பதவிய மற்றும் பிங்கிரிய பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வேண்டி சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் பதவிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Related Articles

Latest Articles