புலம்பமாட்டோம்: கள்வர்களை கண்டுபிடியுங்கள்! ஜனாதிபதிக்கு நாமல் சவால்!!

‘கள்வர்களை கண்டுபிடியுங்கள். நாங்கள் புலம்பவில்லை. முடிந்தால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் பற்றியும் விசாரியுங்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.

சிஐடியில் நேற்று வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர், முன்னாள் ஆட்சியில் இருந்தவர்களை அழைத்து விசாரிக்கும் நடைமுறை தொடர்கின்றது. இது தேர்தல் காலம் என்றபோதிலும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே வருகை தந்திருந்தேன்.

எம்மை பற்றி மக்கள் மத்தியில் பொய்களைக்கூறி தவறான விம்பத்தை தோற்றுவித்துள்ளனர். நீதிமன்றம்மூலம் மட்டுமே நாம் குற்றவாளிகள் அல்லர் என்பது நிரூபனமாகும். அதனால்தான் விசாரணைகளுக்கு அழைக்கப்படும்போது வருகை தருகின்றோம்.

2010 – 2015 காலப்பகுதியில் எனது அலுவலகத்துக்கு வந்து, பணம் வைக்கப்பட்டுள்ளதாக நபரொருவர் கூறியுள்ளாராம். அது பற்றி விசாரிக்கவே இன்று (நேற்று) அழைக்கப்பட்டிருந்தேன். இது அநாமதேய முறைப்பாடாகும்.

நல்லாட்சி காலத்திலும் இப்படிதான் விசாரணைகள் நடந்தன. இறுதியில் குற்றமற்றவர்களென நிரூபனமானது. இதேபோல உகண்டா மற்றும் சீசல்ஸ் தொடர்பிலும் விசாரணை நடத்துங்கள். உகண்டா, சீசல்ஸ் ஆகிய நாடுகளின் பணம் பதுக்கப்பட்டுள்ளது எனக் கூறுபவர்களைக்கூறியும் அழைத்து விசாரியுங்கள்.

மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போகும்போது அரசியல் பழிவாங்கல் வேட்டையை ஆரம்பிக்கக்கூடாது. நாம் குற்றமற்றவர்கள். எதற்கும் தயார்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles