பெருநாள் முற்பணம் வழங்குமாறு பெருந்தோட்ட உத்தியோகஸ்தர்கள் கோரிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் உத்தியோகஸ்தர்களுக்கு ரூ.20000/= பெருநாள் முற்பணமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபட் பிரான்சீஸ் சகல கம்பனி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கும், இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிளாண்டேசன் கம்பனி ஆகிய நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இம்மாதம் சம்பளத்துடன் முற்பணத்தை வழங்கும்படி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

Related Articles

Latest Articles