பெருந்தோட்ட ​பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை

பெருந்தோட்ட பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அவர்களின் போசாக்கு நிலையை உயர்த்தவும் தற்போதைய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய உதவியின் கீழ் பெருந்தோட்டப் பெண்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கான சுகாதார பொருள்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

அரசாங்கம் தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு வருகின்றது. மாத்தளை மாவட்டத்தில் குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் பொருளாதார சமூக அபிவிருத்திக்காக புத்தாண்டில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

Related Articles

Latest Articles