பேராதனையில் மண்சரிவு – ஒருவர் பலி – ஐந்து வர்த்தக நிலையங்கள் சேதம்!

கடும் மழையால், பேராதனை நகரில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

68 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த மண்சரிவால் ஐந்து வியாபார நிலையங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

மண்சரிவையடுத்து கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வீதியில் கிடந்த மண்மேடுகளை அகற்றுவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதேவேளை, பேராதனை நகர் பகுதியில் மண்சரிவு அபாய பகுதியில் உள்ள தற்காலிக கடைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles