பேராதனை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு; விசாரணைகள் ஆரம்பம்

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த 16ஆம் திகதி முதல் குறித்த மாணவன், காணாமல் போயிருந்த நிலையில், நேற்றைய தினம் மகாவலி கங்கையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

குறித்த மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 16 ஆம் திகதி குறித்த மாணவர் காணாமல் போனதாக பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

காணாமல் போனவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மனோதத்துவ துறையில் பயின்று வந்த மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்றும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles