கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றவர்களுக்கு, இரண்டாவது டோஸாகாக பைசர் தடுப்பூசியை ஏற்றும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசி கிடைக்கவுள்ளதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.










