தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னணியின் பிரதித் தலைவர் எம். உதயகுமாரின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது என சங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியை வகித்த எம். திலகராஜ் ஏற்கனவே இராஜினமா கடிதத்தை கையளித்துள்ள நிலையில் அது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராய்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கம் – முன்னணியின் உயர்மட்டக் கூட்டமொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் நடைபெறவுள்ளது. இதன்போது பொதுச்செயலாளர் பதவி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரியவருகின்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசனுக்கு அப்பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும் உதயகுமாரின் பெயரும் பரீசிலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.