பொதுச்செயலாளர் பதவிக்கு சுதந்திரக் கட்சிக்குள் கடும் போட்டி!

வெற்றிடமாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவிக்கு, அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவிவருவதாக தெரியவருகின்றது.

கட்சியின் சிரேஷ்ட பிரதிச் செயலாளரான முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டு, பிரதிச் செயலாளர் இருந்த சரத் ஏக்கநாயக்க பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனால், செயலாளருக்குரிய பணிகளை முன்னெடுக்க  கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசேட மத்திய குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டார்.

எனினும்,  நிரந்தர பொதுச் செயலாளர் நியமனம் இன்னும் இடம்பெறவில்லை. இந்நிலையிலேயே அப்பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.

துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.

சரத் ஏக்கநாயக்க கட்சியின் சிரேஷ்ட பிரதி செயலாளர் என்பதுடன் இதற்கு முன்னர் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

Related Articles

Latest Articles