பொது மலசலகூடத்தில் பணம் திருட்டு – ஹட்டனில் சம்பவம்!

ஹற்றன் பொது மலசலகூடத்துக்குச் சென்ற பெண்ணொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பணம் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இப்பெண் கொழும்பிலிருந்து இ.போ.ச பஸ் வண்டியில் ஹற்றன் வந்துள்ளார். பின்னர் பொது மலசலகூடத்துக்கு சென்ற போது, உள்ளே நுழைவதற்கு முன்னர் மலசலகூடத்திற்கு அருகில் இருந்தவரிடம் தன்னுடைய கைப்பையை கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

உள்ளே போய் வெளியே வந்து பையை பார்க்கும் போது பையில் இருந்த பணத்தை காணவில்லை. பெண் பஸ்ஸில் பணத்தைத் தொலைத்தாரா அல்லது பையை தற்காலிகமாக வைத்திருந்தவர் எடுத்தாரா? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

மலசலகூடத்துக்கு அருகில் வந்து பார்வையிட்ட ஹற்றன் பொலிஸார் அங்கிருந்த நபர்களை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்குச் அழைத்துச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles