பொன்சேகாவிடமிருந்து தவிசாளர் பதவி பறிப்பு?

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை நீக்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது .

கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுதல், கட்சி தலைவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தல் மற்றும் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை விமர்சித்தால் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்நடவடிக்கையை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுவந்த நிலையில் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைப்பதற்கு எடுத்த முடிவு பொன்சேகாவை மேலும் கடுப்பாக்கியது. இதனையடுத்து ஊடக சந்திப்புகளை நடத்தி ஐக்கிய மக்கள் சக்தியையும், அதனை தலைமையையும் பொன்சேகா கடுமையாக விமர்சித்துவருகின்றார்.

அத்துடன், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை புறக்கணித்து வெளிநடத்து செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவுக்கு எதிராக பொன்சேகா செயற்பட்டார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles