தங்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கக்கூடும் என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசினின்,
“இந்த பொருளாதார தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷ்ய விண்வெளி கப்பல்களின் செயல்பாட்டை சீர்குலையும். இதன் விளைவாக, விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷ்ய பிரிவு பாதிக்கப்படலாம், இதனால் 500-டன் கட்டமைப்பு கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் கடல் அல்லது நிலத்தில் வந்து விழும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.