போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் கோரப்படவுள்ளன

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் கோரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

12,000 ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி ஓய்வு பெற்றமையை அடுத்து, தற்போது 22,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, போட்டிப் பரீட்சையை விரைவாக நடத்தி ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles