போலியாக தயாரிக்கப்பட்ட இரத்தினக்கற்களை விற்று வந்த நபர் ஒருவரை எம்பிலிப்பிடிய பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந் நபர் நீண்ட காலமாக இம்மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்கள் மூலம் இவர் தனது வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்
எம்பிலிப்பிட்டிய பொலிசாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டவுடன் இவரால் ஏமாற்றப்பட்ட பலர்
பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சந்தேக நபர் தனது கைவசம் வைத்திருந்த போலி இரத்தினக்கல் பரிசோதிக்கும் உபகரணங்கள் கைத்தொலை பேசிகள் ஆகியவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். எம்பிலிப்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன










