மகன் கொள்ளையிட்ட தங்க சங்கிலியை அடகு வைத்த தாய் கைது!

மகன் கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியை வங்கியொன்றில் அடகு வைத்து பணம் பெற்று கொடுத்த தாய்யும், தங்க சங்கிலி கொள்ளையிட்ட அவரது மகன் மற்றும் நண்பர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்மீமன, கெசெல்கஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான தாய், அவரது 22 வயதான மகன் மற்றும் மகனின் நண்பர்களான 23, 28 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை சந்தேக நபரான தாய் வங்கியில் அடகு வைத்து 61, 500 ரூபா பெற்றுக்கொண்டு 5000 ரூபாவை வைத்துக் கொண்டு எஞ்சிய பணத்தை மகனிடம் கொடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles