மக்களுடன்தான் எங்களுக்கு டீல்!

“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்க விரும்பினால் அது தொடர்பான யோசனை அரசியல் குழுவில் முன்வைக்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகளின் நடத்தையை பார்க்கின்றபோது மக்களுக்கு அரசியல்வாதிகள்மீது வெறுப்பு வருவதே நியாயம்தான் என்றே எண்ண தோன்றுகின்றது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

“ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில்தான் முடிவுகளை எடுக்கவில்லை. கட்சி எடுத்த முடிவின் பிரகாரமே செயற்படுகின்றேன். எமக்கு மக்களுடன்தான் கொடுக்கல் – வாங்கல் உள்ளது. கடைசியில் ஒருவர் மிஞ்சினால்கூட கட்சியின் கொள்கையின் பிரகாரமே செயற்படுவேன்.” – எனவும் நாமல் ராஜபக்ச கூறினார்.

Related Articles

Latest Articles